மே 15ல் கமலின் ‛விக்ரம்' இசை, டிரைலர் வெளியீடு
ADDED : 1252 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ள படம் ‛விக்ரம்'. இவருடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறையில் நடக்கும் கதைக்களத்தை வைத்து அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக்கி உள்ளார் லோகேஷ். அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
தற்போது படத்திற்கான புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாகி உள்ளன. குறிப்பாக ரயில் பெட்டிகளில் விக்ரம் படம் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற மே 15ம் தேதி விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஜூன் 3ல் படம் திரைக்கு வர உள்ளது. 4 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் படம் திரைக்கு வர இருப்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.