ஜனனி அசோக்குமாரின் விண்டேஜ் ஸ்டைல் க்ளிக்ஸ்
ADDED : 1258 days ago
சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜனனி அசோக்குமார். விஜய் டிவியின் 'மாப்பிள்ளை', 'நாம் இருவர் நமக்கு இருவர்' ஜீ தமிழின் 'செம்பருத்தி' என பல ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு தமிழ்நாட்டில் அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர். பேஷன் டிசைனிங் துறையிலும் கலக்கி வரும் ஜனனி, இன்ஸ்டாகிராமில் அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற புடவையில் விண்டேஜ் ஸ்டைலில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.