பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை வெளியிடும் தாணு
ADDED : 1298 days ago
பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள ‛இரவின் நிழல்' படம் உலகிலேயே முதன்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஒரு முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வாங்கியிருக்கிறார்.
இதுபற்றி பார்த்திபன் கூறுகையில், ‛‛ஓடி ஜெயிக்கும் முன் நான் புதிய பாதைக்காக ஓடும் போதே விசிலடித்து உற்சாகப் படுத்தியவர்தான் தாணு. இன்றும் என் இரவின் நிழலுக்கு உற்சவர் ஆவது, அவரது பார்வையில் இந்த நாள் இனிய நாள். அட்சய திருதி அன்று இன்று தங்கம் வாங்குவது விருத்தி. விருத்தி மிகு தாணு அவர்கள் தங்க காசுகளை அள்ளி வழங்கி விட்டு அகிலமெங்கும் இரவின் நிழல் மீது வர்த்தக வெளிச்சம் பாய்ச்சுவதுக்கு உரிமை பெற்றுள்ளது பெருமிதம்'' என்கிறார்.