எஸ்.ஜே.சூர்யா - யாஷிகா படத்திற்கு யு சான்று
ADDED : 1267 days ago
எஸ்.ஜே.சூர்யாவும், யாஷிகா ஆனந்தும் இணைந்து நடித்துள்ள படம் கடமையை செய். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன் , சார்லஸ் வினோத், சேஷு, ராஜா சிம்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கணேஷ் என்டர்டைன்மென்ட் மற்றும் நஹர் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் மற்றும் ஜாகிர் உசேன் இணைந்து தயாரித்துள்ளனர். அருண்ராஜ் இசை அமைத்துள்ளார், ஸ்ரீகாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் வெங்கட் ராகவன் கூறியதாவது: இந்தக் கோடை காலத்திற்கு குடும்பத்தோடு அனைவரும் கண்டுகளிக்க கூடிய ஜனரஞ்சகமான படமாக இருக்கும். இப்படத்தை பார்த்து சென்சார் போர்டு இதற்கு 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். இது நிச்சயமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்து மிகப்பெரிய அளவில் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பிரம்மாண்ட வெற்றி காணும் என்கிறார்.