மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1219 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1219 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'விக்ரம்'. இளம் இயக்குனரான லோகேஷ் உடன் கமல்ஹாசன் கூட்டணி சேர்கிறார் என்ற உடனேயே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகமாக இருந்தது. அதன்பின் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் நடிக்கிறார்கள் என்றதும் அது இன்னும் கூடுதலானது.
'விக்ரம்' படத்தின் வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்தான் படத்தின் கேரளா வெளியீட்டு வினியோக உரிமை நடைபெற்று முடிந்தது. தற்போது படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் வெளியீட்டு உரிமையும் முடிந்துள்ளது. படம் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அதற்கே மொத்தமாக 125 கோடியைக் கொடுத்து ஸ்டார் குழுமம் மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளதாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளுக்குமான விலையாம் அது.
விக்ரம் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடி என கூறுகிறார்கள். ஆனால் இப்போது டிஜிட்டல் விற்பனை மூலமே லாபம் பெற்றுவிட்டதாகவும், தியேட்டர் வெளியீட்டு உரிமை கூடுதல் லாபம் என்கிறார்கள்.
ரஜினிகாந்த் படங்கள்தான் பொதுவாக இவ்வளவு விலைக்குப் போகும். 4 ஆண்டுகள் கழித்து கமல் நடித்த படம் வெளிவருவதால் தற்போது இந்த அளவிற்கு வியாபாரம் செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
1219 days ago
1219 days ago