மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1246 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1246 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1246 days ago
கொரோனா வந்தாலும் வந்தது நமது நடிகைகள் அனைவரும் சுற்றுலா செல்ல உலகத்தில் வேறு இடங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு மாலத் தீவிற்கு மட்டுமே சுற்றுலா சென்றார்கள். அங்குள்ள பெரிய ஹோட்டல்கள் அவர்களை ஸ்பான்சர் செய்து அழைத்துச் சென்றது வேறு கதை. அங்கு போய் விதவிதமான போட்டோ ஷுட்களை நடிகைகள் நடத்தி, அந்த ஹோட்டல்கள் பெயருடன் நன்றாகவே பிரமோஷன் செய்தார்கள். அவற்றில் குறிப்பாக பிகினி புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கும்.
தொடர்ந்து மாலத் தீவு புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்களுக்குப் போரடித்திருக்கும் என்று ஸ்ரேயாவிற்குத் தெரிந்திருக்கிறது. எந்த ஸ்பான்சர், ஹோட்டல் பெயரும் இல்லாமல் கோவா கடற்கரையில் தனது பிகினி புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். கணவர், குழந்தையுடன் குடும்ப சுற்றுலா சென்றிருப்பார் போலிருக்கிறது. அடிக்கும் வெயிலுக்கு கடல் தண்ணீரில் ஹாயாக படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களையும், ஒரு கிளாமரான குட்டி வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா.
வீடியோக்கள் செல்பி வீடியோக்களாக இருக்க, ஸ்ரேயாவின் பிகினி புகைப்படங்களை அவரது கணவர்தான் எடுத்திருக்க வேண்டும். “கோவாவில் அழகான காலை நேரத்தில், ஆசீர்வாதத்துடன்…” என்று கணவரையும் 'டேக்' செய்து பதிவிட்டிருக்கிறார் ஸ்ரேயா.
1246 days ago
1246 days ago
1246 days ago