விஷாலின் 'மார்க் ஆண்டனி' தொடங்கியது
ADDED : 1247 days ago
வீரமே வாகை சூடும் படத்திற்கு பின் விஷால் நடித்து வந்த லத்தி படம் சமீபத்தில் முடிவடைந்தது. அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடிக்கிறார். வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. சில பிரச்னைகளால் இந்த படம் துவங்குமா, துவங்காதா என குழப்பம் நீடித்து வந்த நிலையில் இன்று(மே 5) சென்னையில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து அடுத்தடுத்து படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.