உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மிஸ் இந்தியா' போட்டிக்கு செல்லும் ஷிவானி ராஜசேகர்

'மிஸ் இந்தியா' போட்டிக்கு செல்லும் ஷிவானி ராஜசேகர்

நடிகை ஷிவானி ராஜசேகர் 'பெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு' பட்டத்தை பெற்று அடுத்தப்படியாக 'மிஸ் இந்தியா' போட்டிக்காக 31 போட்டியாளர்களுடன் போட்டியிட உள்ளார்.

நடிகர்கள் டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியரின் மூத்த மகள் நடிகை ஷிவானி ராஜசேகர். தமிழில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “அன்பறிவு” படத்தில் அறிமுகமானார். தற்போது சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் மிஸ் இந்தியா போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் பெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதில் அனைவரின் கவனத்தை ஈர்த்த வகையில் இப்போது அவர் மிஸ் இந்தியா கிரீடத்திற்காக போட்டியிடும் முதல் 31 போட்டியாளர்களில் ஒருவராக போட்டியிடவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !