21வது பிறந்தநாளை கொண்டாடிய ஷிவானி
ADDED : 1250 days ago
சின்னத்திரையில் பகல் நிலவு, இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி. அதன்பிறகு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பெரிய அளவில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இன்னொரு போட்டியாளரான பாலாஜி முருகதாஸ்டன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். மேலும் தனது சோசியல் மீடியாவில் அதிரடியான கிளாமர் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஷிவானி தற்போது சினிமாவில் கமலின் விக்ரம் படத்தில் நடிப்பவர், அதையடுத்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் ஆர். ஜே. பாலாஜி, பொன்ராம் இயக்கும் படங்களிலும் நடிக்கிறார். இந்நிலையில் இன்று தனது 21வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் ஷிவானி. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.