மே 18ல் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்
ADDED : 1261 days ago
யாகவராயினும் நாகாக்க, மரகதநாணயம் படங்களில் நடித்த போது நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டில் கிரீன் சிக்னல் கிடைக்க, கடந்த மார்ச்சில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இருவரும் கூறியிருந்தனர். இந்நிலையில் வருகிற மே 18ல் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் திருமணம் பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது. அன்று மாலை 7மணியளவில் வரவேற்பு நிகழ்வும், தொடர்ந்து திருமணம் தொடர்பான சம்பிரதாயங்கள் நடக்கின்றன. இதில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர். ஆதி வீட்டு குடும்ப முறைப்படி திருமண நிகழ்வுகள் நடைபெற உள்ளன.