கவர்ச்சிப் படங்களை அள்ளித் தெளித்த சமந்தா
ADDED : 1330 days ago
'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் வெற்றியால் சமந்தா மகிழ்ந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு தமிழில் ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. தெலுங்கில் அடுத்தடுத்து 'சாகுந்தலம், யசோதா' என படங்கள் வெளிவர உள்ளன. ஹிந்தியிலும் நடிக்கப் பேச்சுவார்த்தைகளை நடத்தின பாலிவுட்டில் புதிய மேனேஜரையும் நியமித்துள்ளார் சமந்தா.
தன்னுடைய திருமணப் பிரிவு நடிப்பு வாய்ப்பை எந்த விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக முன்பை விட கிளாமராக நடிக்வும் தயார் என சமந்தா சொல்வதாக டோலிவுட் தகவல். அதை நிரூபிக்கும் விதத்தில் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து கவர்ச்சியான போட்டோ ஷுட் புகைப்படங்களைப் பதிவேற்றியிருக்கிறார் சமந்தா.
ராஷ்மிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர்களால் சமந்தாவிற்கு தெலுங்கு, ஹிந்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அவற்றை சமாளிக்க கிளாமர், கவர்ச்சி புகைப்படங்கள்தான் ஒரே வழி என்கிறது டோலிவுட். பாலிவுட்டிலும் தாராளமாக நடிக்க சம்மதித்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.