பத்து தல படப்பிடிப்பு மீண்டும் துவங்குகிறது
ADDED : 1247 days ago
மாநாடு படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. இதையடுத்து முப்தி என்ற கன்னட படத்தின் ரீமேக்கான பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கிறார் சிம்பு. இப்படத்தில் சிம்பு கேங்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 27ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ச்சியாக ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.