உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாரா திருமண தேதி பகிரங்கப்படுத்திய கீர்த்தி சுரேஷ்

நயன்தாரா திருமண தேதி பகிரங்கப்படுத்திய கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரின் நீண்டநாள் ஆத்மார்த்த காதல் பற்றி எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது என்றும், விரைவில் திருப்பதியில் அவர்கள் திருமணம் நடைபெற உள்ளது என்றும் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகின.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்வேன் என ஏற்கனவே கூறியிருந்தார் விக்னேஷ் சிவன். அதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் இரண்டு முறை நயன்தாராவுடன் திருப்பதிக்கு சென்று வந்துள்ளார். ஒரு முறை சாமி தரிசனம் செய்வதற்கு என்றும் மறுமுறை சென்று வந்தது அங்கே தங்களது திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்கு என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்டார் அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாராவிடம் உங்களுக்கு ஜூன் 9ம் தேதி திருமணம் .. சரிதானே..? என்று வெகுளித்தனமாக கேட்டாராம். அந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் மூலமாக இப்போது அந்த தகவல் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் இரண்டாவது முறை திருப்பதிக்கு சென்று வந்ததையும், கீர்த்தி சுரேஷ் தேதி குறிப்பிட்டு இப்படி கேட்டதையும் பார்க்கும்போது கிட்டத்தட்ட ஜூன் மாதம் 9ம் தேதி இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணையும் என்றே தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !