உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போர்சூழல் எதிரொலி : செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் வெளியிட தடை

போர்சூழல் எதிரொலி : செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் வெளியிட தடை

'பார்க்' (பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்) என்ற அமைப்புதான் தொலைக்காட்சி சேனல்களுக்கு ரேட்டிங் வழங்கும். தொலைக்காட்சியை பார்க்கும் பார்வையாளர்களை கவனித்து பொழுதுபோக்கு மற்றும் செய்திச் சேனல்களில் எவை ரசிகர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறது என்பதை வாராவாரம் கணக்கிட்டு டிஆர்பி ரேட்டைவழங்கும். இந்த அமைப்பு வழங்கும் ரேட்டிங் புள்ளிகளை வைத்தே டிவி சேனல்களுக்கு விளம்பர வருவாய் வரும்.

இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது இந்த அமைப்பு. தற்போது வளைகுடா நாடுகளில் யுத்த சூழ்நிலை நிலவுவதால் செய்தி சேனல்கள் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக செய்திகளை பரபரப்பாக, மக்களை பதட்டமடைய செய்யும் வகையில் வெளியிடுவதை தடுக்கும் வகையில் 'பார்க்' அமைப்பு செய்தி சேனல்களுக்க டிஆர்பி ரேட்டிங்கை வழக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்த அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது, செய்திச் சேனல்களின் நிகழ்ச்சிகள் தொடர்பான ரேட்டிங் விபரங்களை அடுத்த நான்கு வாரங்களுக்கு அல்லது அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை வெளியிட வேண்டாம் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Raja Eswaran, Dubai
2026-03-11 14:11:03

தயவு செய்து தடை செய்து விடுங்கள். புண்ணியமாக போகும். போர் சூழலில் இருக்கும் மக்களை மேலும் கலவரப்படுத்தி அவர்கள் குடும்பத்தினரையும் கலவரப்படுத்தி, அவர்கள் செய்யும் அட்டகாசங்களை காணும் பொது தடை செய்வதே மேல்.