ஓடிடியில் வெளியாகும் சேத்துமான்
ADDED : 1211 days ago
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையை தழுவி உருவாகியுள்ள படம் சேத்துமான். இந்த படத்தை நீலம் புரோடக்சன் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். புதுமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
இது ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான கதை. இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிட பா.ரஞ்சித் முயற்சி செய்தார் அது சாத்தியப்படவில்லை. அதனால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்.
அதன்படி வருகிற 27ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றிருக்கிறது.