பிரியங்கா நல்கரியின் சகோதரியை பாத்துருக்கீங்களா?
ADDED : 1264 days ago
ரோஜா தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா நல்கரி. சின்னத்திரையின் ஹன்சிகா என செல்லமாக அழைக்கப்படும் ப்ரியங்கா சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் ஏரளமாக உள்ளனர். அடிக்கடி ரீல்ஸ் வீடியோ, புகைப்படம் என வெளியிட்டு அசத்தி வரும் ப்ரியங்கா, தற்போது தனது சகோதரியுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் 'உன்ன கல்யாணம் பண்ணான், என்ன பண்ணிட்டான்' என்கிற இரட்டை அர்த்தமுள்ள வைரல் வசனத்தை இருவரும் சேர்ந்து பேசியுள்ளனர். இதை பார்த்துவிட்டு ப்ரியங்காவுக்கு இவ்வளவு அழகான சகோதரியா? என ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். மேலும், ப்ரியங்காவின் சகோதரியான பாவனா நல்கரியின் இன்ஸ்டாவையும் பாலோ செய்து ஜொள்ளுவிட ஆரம்பித்துவிட்டனர்.