ஆளை மயக்கும் நக்ஷத்திரா
ADDED : 1288 days ago
நடிகை நக்ஷத்திரா நாகேஷ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும், தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சிகளையு தொகுத்து வழங்குவதோடு, சீரியல்களிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் அழகு பதுமையாக சுற்றி வந்து இளைஞர்களை ஏங்க வைத்த நக்ஷத்திரா அண்மையில் தனது காதலரை திருமணம் செய்து மண வாழ்வில் நுழைந்துள்ளார். திருமணத்திற்கு பின் தன் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இது வாலிபர்களை பொறாமை கொள்ளச் செய்தது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பரான சோலோ போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது உடையும், ஆளை மயக்கும் சிரிப்பில் கிறங்கி போன ரசிகர்கள், தேவதை என வர்ணிக்கின்றனர்.