உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கீர்த்தி சுரேஷின் 'வாஷி' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கீர்த்தி சுரேஷின் 'வாஷி' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் விஷ்ணு இயக்கத்தில் டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து உருவாகியுள்ள திரைப்படம் 'வாஷி'. கைலாஷ் மேனன் இப்படத்திற்கு இசைஅமைத்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ், டொவினோ தாமஸ் இருவரும் வழக்கறிஞராக நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் புதிய மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !