விஜய் ஆண்டனியின் 'வள்ளி மயில்' படப்பிடிப்பு துவங்கியது
ADDED : 1245 days ago
சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் படம் 'வள்ளி மயில்'. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(மே 16) பூஜையுடன் திண்டுக்களலில் தொடங்கியது . அமைச்சர் சக்கரபாணி படப்பிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றி முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது. இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பரியா அப்துல்லா,'புஷ்பா' புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.