உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திரிஷா சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திரிஷா சாமி தரிசனம்

'தி ரோட்' படத்தில் நடிகை த்ரிஷா முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸாக கலக்கிய ஷபீர் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திரிஷா சாமி தரிசனமும் செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !