விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே
ADDED : 1240 days ago
விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் உடன் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஜன கண மன என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா விமானப்படை அதிகாரியாக நடிக்கிறார். படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் ஐரோப்பாவில் படமாக்கப்பட உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் பல இந்திய மொழிகளில் வருகின்ற ஆகஸ்ட் 3, 2023 அன்று வெளியாகிறது.