உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர்

ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர்

வினோத் - அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து, படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அஜித்தின் 61வது படமாக உருவாகும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். படம் பற்றி தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில், ‛‛இந்த படத்தில் அஜித் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். அவரது லுக் நிச்சயம் ரசிகர்களால் விரும்பப்படும். 35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஆகஸ்ட் முதல்வாரத்தில் படம் முடிவடையும். அஜித்தின் அசாத்திய நடிப்பில் வினோத் ஸ்டைலில் இந்த படம் இருக்கும். இந்தாண்டு நிச்சயம் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !