விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் சூர்யா
ADDED : 1243 days ago
1986ம் ஆண்டு கமல் நடித்து வெளியான படம் விக்ரம். இந்த படத்தின் இரண்டாம் பாகமாக தான் தற்போது விக்ரம் படம் உருவாகி உள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளாராம். அவருடன் விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருடன் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். விக்ரம் படத்தில் கமலின் மகனாக சூர்யா நடித்திருக்கிறார். கதைப்படி படத்தின் கிளைமாக்ஸில் தான் சூர்யா வருவதாகவும், அவரின் என்ட்ரி விக்ரம் 3 படடத்திற்கான முன்னோட்டமாக இருக்கும் என கேன்ஸ் பட விழாவில் ஒரு பேட்டியில் கமல் கூறியுள்ளார். இதனால் விக்ரம் 3 படம் உருவானால் அதில் சூர்யா நடிக்கலாம் என்றும், அதை லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.