ஆக.,11ல் ‛கோப்ரா' ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு
ADDED : 1236 days ago
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‛விக்ரம்' பல வேடங்களில் நடித்துள்ள படம் ‛கோப்ரா'. நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, முக்கிய வேடத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். அதிரடி ஆக் ஷன் படமாகவும், சயின்ஸ் கலந்த பிக்ஷன் படமாகவும் உருவாகி உள்ளது. கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த இப்படம் சமீபத்தில் முடிந்தது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. முதலில் இம்மாதம் படத்தை வெளியிடுவதாக இருந்தனர். ஆனால் பட பணிகள் முடியாததால் ஆகஸ்ட்டிற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வந்தன. இப்போது ஆக 11ல் உலகம் முழுக்க தியேட்டர்களில் கோப்ரா படம் ரிலீஸாகும் என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.