மீண்டும் இயக்குனராக களமிறங்கும் அர்ஜுன்
ADDED : 1316 days ago
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அர்ஜுன் நடிப்பு மட்டுமில்லாமல் பல படங்களையும் இயக்கி வந்தார். தற்போது படங்களில் முக்கிய முன்னணி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அர்ஜுன் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
அர்ஜுன் 4 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் பிரேமா பரஹா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் தெலுங்கில் புதிய படத்தை இயக்க இயக்குகிறார். தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் கதாநாயகியாக நடிக்கிறாராம். இந்தப் படத்தில் மூலம் ஐஸ்வர்யா தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .