'மகான்' படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜன் காட்சிகள் வெளியானது
ADDED : 1281 days ago
விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'மகான்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இப்படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருந்தனர். விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மகான் படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது . கொரோனா இரண்டாம் அலை வந்ததால் வாணி போஜன் கதாபாத்திரம் முழுமையடையாமல் இருந்தது. அதனால் அவரது காட்சிகளை நீக்கியுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் கூறினார். தற்போது மகான் படத்தில் வாணி போஜன் இடம் பெற்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமின்றி படத்தில் இருந்து சில நீக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.