'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பிரபல நடிகை சூட்கேஸ் மாயம்
ADDED : 1280 days ago
ஐரோப்பிய நாடான பிரான்ஸின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில், நம் நாட்டில் இருந்து நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் சென்றுள்ளனர். இங்கு, பூஜாவின் உடைகள் இருந்த சூட்கேஸ் காணாமல் போனது. ஆனால், அவரது 'மேக்கப்' சாதனங்கள் மற்றும் நகைகள் இருந்த பெட்டிகள் தப்பின. இதுகுறித்து, விசாரணை நடந்து வருகிறது.