சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர்
ADDED : 1234 days ago
நடிகர் சிவாஜி கணேசனின் மகன் பிரபு மற்றும் ராம்குமார் ஆகிய இருவருமே திரைப்படங்களில் நடித்து உள்ளனர். இதில் பிரபுவின் மகன் விக்ரம் தற்போது தமிழ் சினிமாவில் 'டாணாக்காரன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்ஷன் புனேயில் தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டுள்ளார். தற்போது தர்ஷன் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.