உடல்நலக்குறைவால் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : 1315 days ago
நடிகர் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 19ம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த இருதயவியல் துறை மருத்துவர்கள், அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது, நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.