மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1200 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1200 days ago
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், ஹிந்தி, பிரெஞ்ச் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கிலும் நேரடிப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் முதல் முறையாக 'த கிரே மேன்' படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார்.
கேப்டன் அமெரிக்கா - தி வின்டர் சோல்சர், கேப்டன் அமெரிக்கா - சிவில் வார், அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவஞ்சர்ஸ் என்ட்கேம்' படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் என அழைக்கப்படும் அந்தோணி ரூசோ, ஜோசப் ரூசோ இயக்கியுள்ள படம்தான் 'த கிரே மேன்'.
இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். 200 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில் இப்படம் உருவாகியுள்ளது. 2021ம் வருடம் ஜனவரி மாதம் கலிபோர்னியாவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. ஜுலை மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தார்கள். அமெரிக்கா, பராகுவே, செக் குடியரசு உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஓடிடி தளத்தில் ஜுலை 15ம் தேதியன்று இப்படம் வெளியாக உள்ளது.
இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. தமிழ் நடிகரான தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் என்பதால் இது தமிழ் சினிமாவுக்கே ஒரு பெருமை.
1200 days ago
1200 days ago