சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா
ADDED : 1332 days ago
தெலுங்கில் தற்போது சாகுந்தலம், யசோதா, குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இதில் சிவா நிர்வனா இயக்கும் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனபோதிலும் சிறிய காயம் என்பதால் முதலுதவி சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் விஜய் தேவர்கொண்டா- சமந்தா இருவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.