மலையாள இசை அமைப்பாளர் காலமானார்
ADDED : 1230 days ago
மலையாள இசை அமைப்பாளர் பாரிஸ் சந்திரன் என்கிற சந்திரன் வெயாட்டும்மாள். ஞான் ஸ்டீவ் லோபஸ், திருஷ்டானம், சாயில்யம், பம்பாய் மிட்டாய், நகரம், பயாஸ்கோப், ஈடா உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பயாஸ்கோப்' படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான கேரள மாநில விருதைப் பெற்றார். 'பிரணயத்தில் ஒருவாள்' என்ற டெலிபிலிமிற்காக கேரள அரசின் தொலைக்காட்சி விருதைப் பெற்றார்.
66 வயதான பாரிஸ் சந்திரன் கோழிக்கோட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோழிக்கோடு மருத்துக்கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவருக்கு மலையாள சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நேற்று அவரது சொந்த ஊரான நரிக்குனியில் இறுதி சடங்குகள் நடந்தது.