பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்
ADDED : 1230 days ago
பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை மாளவிகா மோகனன் அடுத்தபடியாக ஹிந்தியில் தயாராகும் யுத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளத்தில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பேர் மாளவிகாவை பாலோ செய்யும் நிலையில் தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் டில்லியில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ஸ்டைலாக தான் வாக் செய்த புகைப்படங்கள் தற்போது பதிவேற்றியுள்ளார். கருப்பு நிற மாடர்ன் உடையில் மாளவிகா மோகனன் ஸ்டைலாக நடந்து வரும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.