விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு
ADDED : 1451 days ago
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது 61வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. வங்கி கொள்ளை தொடர்பான கதையில் இந்த படம் தயாராகிறது. இதை முடித்ததும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கிறார் அஜித். இதன் படப்பிடிப்பை அக்டோபரில் துவக்க உள்ளனர். இயற்கை விவசாய முறையில் சத்தான உணவு வகைகளை தயாரித்து தமிழகம் முழுவதும் கொடுக்கும் நபராக அஜித் நடிக்க உள்ளார். படத்தில் கார்பரேட் தொடர்பான வசனங்கள் அதிகம் உள்ளதாம். அவற்றில் அரசியல் நெடி இல்லாதபடி வசனத்தை அமைக்கும்படி விக்னேஷ் சிவனுக்கு அஜித் உத்தரவு போட்டுள்ளாராம்.