‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி
ADDED : 1231 days ago
இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன் அன்பறிவு படம் வெளியானது. இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அடுத்தப்படியாக தற்போது ‛வீரன்' என்ற படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இவரே இசையமைக்கவும் செய்கிறார். மரகதநாயணம் படம் புகழ் ஏஆர்கே.சரவன் இந்த படத்தை இயக்குகிறார். பேண்டஸி உடன் ஆக் ஷனும், காமெடி கலந்த உருவாகும் இதன் படப்பிடிப்பு படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.