உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார்

சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார்

நட்சத்திர தம்பதியரான இயக்குனர் சுந்தர் சி - நடிகை குஷ்புவின் மூத்தமகள் அவந்திகா சினிமாவில் நடிக்க தயாராகி விட்டார். இதுகுறித்து குஷ்பு பதிவிட்டுள்ளதாவது : ‛‛எனது மூத்த மகள் லண்டனில் உள்ள சிறந்த நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்து விட்டார். அடுத்ததாக அவர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கப் போகிறார். ஆனால் அவரை நாங்கள் அறிமுகமோ அல்லது பரிந்துரையோ செய்யப்போவதில்லை. நீங்கள் அவரை வாழ்த்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து குஷ்பூவை பாலோ செய்யும் ரசிகர்கள், குஷ்புவை போலவே அவரது மகள் அவந்திகாவும் சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்தி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !