உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியாவில் அதிக பிரபலமான நடிகைகள் : டாப் 10ல் தென்னிந்திய நடிகைகள் ஆதிக்கம்

இந்தியாவில் அதிக பிரபலமான நடிகைகள் : டாப் 10ல் தென்னிந்திய நடிகைகள் ஆதிக்கம்

இந்தியாவில் தற்போது பான் இந்தியா என்ற வார்த்தை பல மொழி சினிமாக்களிலும் ஒலிக்க துவங்கி உள்ளது. இந்த புகழ் நடிகர்களுக்கு மட்டுமல்ல நடிகைகள், இயக்குனர்களுக்கும் ஒரு அங்கீகாரத்தை பெற்று தருகிறது. அந்தவகையில் தென்னிந்தியாவில் இருந்து பலரும் பிரபலமாகி வருகிறார்கள்.

ஆர்மக்ஸ் மீடியா நிறுவனம் இது குறித்த ஒரு சர்வேயை எடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி ஆகிய மாநிலங்களில் உள்ள நடிகர்கள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். கடந்த ஏப்ரல் 2022க்காக எடுக்கப்பட்ட சர்வேயில் டாப் 10 நடிகைகள் பட்டியலில் தென்னிந்திய நடிகைகள் 7 பேரும், பாலிவுட் நடிகைகள் 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.


டாப் 10 நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2வது இடத்தில் ஆலியா பட், 3வது இடத்தில் நயன்தாரா, 4வது இடத்தில் காஜல் அகர்வால், 5வது இடத்தில் தீபிகா படுகோனே, 6வது இடத்தில் ராஷ்மிகா மந்தனா, 7வது இடத்தில் அனுஷ்கா, 8வது இடத்தில் காத்ரினா கைப், 9வது இடத்தில் கீர்த்தி சுரேஷ், 10வது இடத்தில் பூஜா ஹெக்டே ஆகியோர் உள்ளனர். இதன்மூலம் ஹிந்தி நடிகைகள் ஓரங்கட்டி தென்னிந்திய நடிகைகள் அதிகளவில் முன்னேறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !