ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ்
ADDED : 1230 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்துள்ள ‛விக்ரம்' படம் ஜூன் 3ல் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்காக நாடு முழுக்க புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன். அதோடு படத்தையும் வித்தியாசமான முறைகளில் புரொமோஷன் செய்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று படத்தை புரொமோஷன் செய்து வருகிறார். நான்கு ஆண்டுகள் கழித்து கமல் படம் வருவதால் இத்தனை இடங்களுக்கு சுற்றித்திரிந்து வருகிறார் கமல்.
இந்நிலையில் விக்ரம் படம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் சந்தித்து பேசி உள்ளனர். இது தொடர்பான போட்டோக்களை கமல், லோகேஷ் வெளியிட்டுள்ளனர். இதுபற்றி லோகேஷ், ‛‛நன்றி கமல், ரஜினி சார். என்ன ஒரு நட்பு. ஊக்கமளிக்கும் அன்பு'' என தெரிவித்துள்ளார்.