கண்மணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நவீன்
ADDED : 1231 days ago
சின்னத்திரை நடிகரான நவீனுக்கும், செய்தி வாசிப்பாளரான கண்மணிக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ரசிகர்கள் யாருமே எதிர்பாராத வகையில் இருவரும் தங்கள் காதலை திடீரென அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்தனர். விரைவில் இருவரது திருமணமும் நடைபெற உள்ள நிலையில் நவீன், கண்மணி வெளியிடும் அப்டேட்டுகளுக்கு லைக்ஸ் பிய்த்துக் கொண்டு போகிறது. இந்நிலையில், தனது வருங்கால மனைவியின் பிறந்தநாளை நவீன் பெரிதாக சர்ப்ரைஸ் கொடுத்து கொண்டாடியுள்ளார். இதற்காக சென்னையின் பிரபல் ஈவண்ட் கம்பெனியை அணுகி டெக்கரேஷன் செய்து அசத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. கண்மணிக்கு சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.