மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1193 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1193 days ago
சிறிய இடைவெளிக்கு பிறகு ஹரி இயக்கி உள்ள படம் யானை. இந்த படத்தில் ஹரியின் மைத்துனர் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் ஹீரோயின், சமுத்திரகனி, அம்மு அமிராமி, ராஜேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் நடித்திருப்பது பற்றி அருண் விஜய் கூறியதாவது: மாமாவின் (ஹரி) இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். அது தள்ளிபோய் கொண்டே வந்து இப்போது நிறைவேறியிருக்கிறது, படப்பிடிப்பில் மாமா, மாப்ஸ் என்று உறவு சொல்லித்தான் பேசிக் கொள்வோம். மற்றபடி எந்த சலுகையும் இல்லை. உறவு வேறு, கலை வேறு என்பதை தெளிவாக புரிந்து கொண்டு பணியாற்றினோம்.
இந்த படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்த படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். படத்தின் ஆக்சன் பெரிய சவாலாக இருந்தது. எனக்கு அடிபட்டது, அதையும் மீறி படத்தை எடுத்து முடித்தோம். கண்டிப்பாக படம் பேசப்படும் என நம்புகிறோம். என்றார்.
1193 days ago
1193 days ago