மேலும் செய்திகள்
'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம்
1194 days ago
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1194 days ago
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் பலர் நடித்த படம் 'கேஜிஎப் 2'. ஏப்ரல் மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.
அடுத்தடுத்து பல வசூல் சாதனைகளைப் புரிந்து தற்போது 50வது நாளைத் தொட்டிருக்கிறது. இந்தியாவில் 400 சென்டர்களிலும், வெளிநாடுகளில் 10 சென்டர்களிலும் இப்படம் 50வது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 1300 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது 'கேஜிஎப் 2'. தமிழகத்தில் மட்டுமே இப்படம் 130 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல். ஹிந்தியில் 500 கோடி வசூலையும் கடந்திருக்கிறது. இரண்டு மொழிகளிலும் பல நேரடிப் படங்களின் வசூலை மிஞ்சியுள்ளது இந்த கன்னட மொழி மாற்றுப் படம்.
படத்தின் தயாரிப்பாளரான விஜய் கிரகன்டூர், “புதிய சகாப்தத்தின் மான்ஸ்டர் என்டர்டெயின்மென்ட்டை எங்களுடன் சேர்த்து எழுதி, தைத்ததற்கு நன்றி. உங்களது கட்டுப்பாடில்லாத அன்பாலும், அசைக்க முடியாத ஆதரவாலும்தான் இது நடந்தது. இன்னும் கர்ஜித்துக் கொண்டே இந்த மான்ஸ்டரைக் கொண்டாடுவோம். தோற்றகடிக்க முடியாத 50வது நாளில்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
1194 days ago
1194 days ago