உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு நடிகர் சங்கம் ஆக மாறுகிறதா?

தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு நடிகர் சங்கம் ஆக மாறுகிறதா?

2019ம் ஆண்டு நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதையடுத்து எழுந்த சில பிரச்சனைகளால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்ட நிலையில் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தென் இந்திய மொழி படங்கள் அனைத்தும் சென்னையில் படமாக்கப்பட்ட வந்த காலத்தில் நடிகர் சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக தெலுங்கு, கன்னட சினிமா துறையினர் ஆந்திரா, கர்நாடகா என்று இடம் பெயர்ந்து விட்டார்கள். அதோடு தங்களது மொழிக்கு என்று தனித்தனியாக நடிகர் சங்கமும் உருவாக்கி விட்டனர் . ஆனபோதிலும் சென்னையில் உள்ள தமிழ் நடிகர் சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறது. அதனால் நடிகர் சங்கத்திற்கு தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடைய நேற்று நடிகர்கள் நாசர், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் ரஜினியை சந்தித்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது இதுப்பற்றியும் பேசியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !