ப்ரணிகாவின் டாட்டூ
ADDED : 1229 days ago
இப்போதெல்லாம் சீரியலிலோ, சினிமாவிலோ, பிரபலமாகிவிட்ட நடிகைகள் கண்ட இடங்களில் டாட்டூ குத்திக் கொள்வதை பேஷனாக வைத்துள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியின் 'பாவம் கணேசன்' தொடரில் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் ப்ரணிகா தக்ஷூ. ஆரம்ப காலக்கட்டங்களில் டிக் டாக் மூலம் பிரபலமான இவர் இன்று சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், அதையெல்லாம் தாண்டி இன்ஸ்டாவில் இவர் வைரல் நாயகியாக வலம் வருகிறார். பல விளம்பரங்களுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டையான கேஷூவல் டிரெஸ்ஸில் க்யூட்டாக போஸ் கொடுத்து புதிய புகைப்படங்களை ப்ரணிகா வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் அவர் கெண்டை காலில் டாட்டூ குத்தியிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.