மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1188 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1188 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1188 days ago
தமிழ் சின்னத்திரை ஆரம்ப காலக்கட்டத்தில் சில தரமான தொடர்களை அனைத்து ஜேனர்களிலும் எடுத்து அசத்தி வந்தது. அடுத்தடுத்து டிவி சேனல்களின் எண்ணிக்கை அதிகமானதால் ரசிகர்களை கவர சில மசாலா கதைகளும் வெளியானது. ஆனால், அரைத்த மாவையே அரைக்கும் அந்த டெக்னிக் தமிழ் ரசிகர்களிடம் ரொம்ப நாட்கள் எடுபடவில்லை. எனவே, தரமான கதைகளை நோக்கி டிவி சேனல்கள் நகர ஆரம்பித்தன. இன்று தமிழில் உள்ள டாப் சேனல்கள் அனைத்துமே கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் 'கயல்' தொடர் ஒரு நடுத்தர குடும்பத்து பெண் வாழ்வில் பல பிரச்னைகளை சந்தித்து எதிர்நீச்சல் போடும் கதையை சொல்கிறது. இந்த தொடர் ரிலீஸான நாள் முதல் இன்று வரை டிஆர்பியில் டாப்பில் இடம் பிடித்து வருகிறது. 'கயல்' தொடர் ஏற்கனவே இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்தே தெலுங்கில் 'சாதனா', கன்னடத்தில் 'ராதிகா', பெங்காளியில் 'மேகே தாக்கா தாரா', மராத்தியில் 'மஜ்ஜி மானஷா', ஆகிய பெயர்களில் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், தற்போது மலையாளத்திலும் 'பாவனா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதற்கான ப்ரோமோவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒரே காலக்கட்டத்தில் 6 மொழிகளில் ஒளிபரப்பாகும் ஒரே தொடர் என்ற சாதனையை 'கயல்' தொடர் படைத்துள்ளது.
1188 days ago
1188 days ago
1188 days ago