மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
1213 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
1213 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
1213 days ago
தமிழ் திரையுலகை கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக தனது காந்தக் குரலால் மகிழ்வித்து வந்தவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம். கடந்த 2020ல் கொரோனா தொற்று காரணமாக அவர் உயிரிழந்தது திரையுலகிற்கு மட்டுமல்லாமல் அவரது இசை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் பேரிழப்பாகவும் அமைந்தது. இந்த நிலையில் அவரது 75வது வருட பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக எஸ்பிபி 75 என்கிற சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியை நடத்தினார் எஸ்பிபி சரண். நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக ஏ.ஆர் ரஹ்மான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையேறி எஸ்பிபி.,யின் ஹிட் பாடலான முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை இடையிலிருந்து பாட ஆரம்பித்தார். சில வரிகள் பாடியதும் அதற்கடுத்த வரிகள் அவருக்கு நினைவில் வராமல் சற்று தடுமாறினார். உடனே அருகிலிருந்த எஸ்பிபி சரண் அந்த பாடலை அவர் விட்ட இடத்திலிருந்து சில வரிகள் பாடி கைகொடுக்க அதற்கடுத்த வரிகளை இருவருமே கோரஸாக சேர்ந்து பாட அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.
1213 days ago
1213 days ago
1213 days ago