விஜய் தேவரகொண்டாவின் 'ஜேஜிஎம்' படப்பிடிப்பு தொடங்கியது - நாயகியாக பூஜா ஹெக்டே இணைந்தார்
ADDED : 1320 days ago
பூரி ஜெகன்னாத் இயக்கும் புதிய தெலுங்கு படம் ஜேஜிஎம்(ஜன கன மன) . இதில் விஜய்தேவரகொண்டா ஹீரோ. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆக்சன் டிராமா ஜானரில் தயாராகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்ட அட்டவணையுடன் தொடங்கியது. இதில் நடிகை பூஜா ஹெக்டே அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி பல வெளிநாடுகளில் நடக்கிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.