விக்ரம் படம் பார்த்து ஷங்கர் என்ன சொன்னார்
ADDED : 1216 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இயக்குனர் ஷங்கர், விக்ரம் படத்தை பார்த்துவிட்டு ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், ‛‛கமல்ஹாசன் அவர்களை மீண்டும் 360 டிகிரியில் பார்ப்பதற்கு அழகாக உள்ளது. அவர் ஒரு உண்மையான லெஜெண்ட். லோகேஷ் கனகராஜ் ஸ்டைல் சிறப்பாக உள்ளது. இடைவேளை காட்சி அபாரமாக இருக்கிறது. அனிருத் மீண்டும் தான் ஒரு ராக்ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார். அன்பறிவு இந்த படத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்'' என கூறியுள்ளார் ஷங்கர்.