ஹன்சிகா பட படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1458 days ago
கே.எஸ்.ரவிக்குமாரிடம் இயக்குநராக இருந்த சரவணன் தற்போது ஹன்சிகாவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். பெண் கதாபாத்திர முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தை 'வாலு', 'ஸ்கெட்ச்', 'சங்கத்தமிழன்' ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது. படக்குழுவினர் அதை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது .