சத்குருவின் மண் காப்போம் இயக்கத்தில் இணைந்த சமந்தா
ADDED : 1208 days ago
கோவை வெள்ளியங்கரி மலையில் உள்ள ஈஷா யோக மையத்தின் சத்குரு ஜக்கிவாசுதேவ் தற்போது மண் காப்போம் என்ற இயக்கத்தை தொடங்கி உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அதற்கு ஆதரவு திரட்டி வருகிறார். சுற்றுப்புற சூழல், வனம், காடு, கடல் இவற்றை பாதுகாத்து இந்த பூமியை வருங்கால சந்ததிகளுக்கு பத்திரமாக கொடுக்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.
இந்த இயக்கத்தின் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகை சமந்தா கலந்து கொண்டு இந்த இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். சமந்தா, சத்குருவின் தீவிரமான பக்தை என்பதும் ஈஷா மையத்தில் முறையாக யோகாச பயிற்சி முடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.