ஜூனியர் என்டிஆரை இயக்கும் வெற்றிமாறன்?
ADDED : 1239 days ago
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரட்டலா சிவா மற்றும் கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் ஆகியோருடன் புதிய படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியது. இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆரை நேரில் சந்தித்து கதை கூறியதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. வெற்றிமாறன் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்க இருக்கிறார்.